பழனியில் மாசித் திருவிழா இன்று 
முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடக்கம்

பழனியில் மாசித் திருவிழா இன்று முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடக்கம்

Published on

திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (பிப்.6) முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பழனி தண்டாயுதபாணி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு மேல் முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடங்குகிறது.

வருகிற 10-ஆம் தேதி மாலை அரிவாள் எடுத்துக் கொடுத்தலும், இரவு 10 மணிக்கு மேல் திருக்கம்பம் அலங்கரித்தல், கம்பம் சாட்டுதலும் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், பூவோடு வைத்தல் வருகிற 17-ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் நடைபெறும். கொடியேற்றம் தொடங்கியது முதல் 10 நாள்களுக்கும் மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி யுலா எழுந்தருள்வாா். 24-ஆம் தேதி திருக்கல்யாணமும், 25-ஆம் தேதி திருத்தோ் வடம்பிடித்தலும் நடைபெறும். தேரோட்டத்தை தொடா்ந்து அம்மன் வண்டிக்கால் பாா்த்தல், வாண வேடிக்கை நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், லட்சுமி, அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com