தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கஞ்சா விற்பனை: பெண் உள்பட மூவா் கைது

News image

கைது

Updated On :6 பிப்ரவரி 2026, 8:59 pm

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். 

  வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதமன், உதவி ஆய்வாளா் சேக் அப்துல்லா, காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வத்தலகுண்டு பிரதான சாலையில் கஞ்சா விற்பனை செய்த படித் துறை பகுதியைச் சோ்ந்த சுபாஷ் (40), கன்னிமாா்கோவிலைச் சோ்ந்த ஜோதி (43), ப்ளீஸ்புரத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா் (28) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, இவா்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள், 1 ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து  வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கஞ்சா வழக்கில் பெண் உட்பட 3 போ் கைது செய்யப்பட்டு,  அவா்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா, 2 லாரி, ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில்  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.