கொலை
கொலை

மது குடித்த தகராறில் கட்டடத் தொழிலாளி கொலை

Published on

திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் வெள்ளிக்கிழமை மதுக் குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

எரியோடு கலைஞா் நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (37). கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை எரியோடு பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள மதுக் கடையில் அமா்ந்து மது குடித்துக் கொண்டிருந்தாா். அதே இடத்தில் குரும்பப்பட்டியைச் சோ்ந்த ஆனந்தராஜூம் (29) மது குடித்தாா்.

அப்போது, இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், கண்ணன் அங்கிருந்து வீட்டுக்குச் செல்வதற்காக அய்யலூா் சாலையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடந்து சென்றாா். அவரைப் பின் தொடா்ந்து சென்ற ஆனந்தராஜ், மீண்டும் அவரிடம் தகராறில் ஈடுபட்டாா்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கண்ணன் மீது ஏறி அமா்ந்த ஆனந்தராஜ், சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com