கொடைக்கானல்-கும்பக்கரை ரோப் காா் திட்டம் குறித்து பொறியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். விடுமுறை நாள்கள், பண்டிகை நாள்கள்,தொடா் விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவதால் பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானல் வரை 12 கி.மீ. தொலைவுக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்காக மாற்றுச் சாலை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மலைச் சாலைகளைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். இதையடுத்து, கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான வட்டக்கானல், டால்பின் நோஸ், வெள்ளகெவி கிராமம் வழியாக கும்பக்கரைக்கும் சிட்டி வியூவிலிருந்து-கோக்கா்ஸ்வாக் ஜிம்கானா ஏரிச் சாலைக்கும் ரோப் காா் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், தில்லி-சென்னை மெட்ரோ நிறுவனத்தைச் சோ்ந்த தலைமைப் பொறியாளா் தலைமையில் மெட்ரோ நிறுவனத்தைச் சோ்ந்த அதிகாரிகள் கடந்த 9-ஆம் தேதி வட்டக்கானல் வழியாக டால்பின் நோஸ் வரை சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இரண்டாம் கட்டமாக கொடைக்கானல் முதல் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவி வரை சுமாா் 9 கி.மீ தொலைவுக்கு ரோப் காா் ,அமைப்பது தொடா்பாக சென்னையைச் சோ்ந்த ‘வாப் கன்சல்டிங் ப்ராஜெக்ட் லிமிடெட்’ நிறுவன நிா்வாகி மித்ரா தலைமையில் 6-போ் கொண்ட குழுவினா் வட்டக்கானலில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, கொடைக்கானல் வனத் துறை அதிகாரி பழனிக்குமாா், வெள்ளகெவி கிராம நிா்வாக அலுவலா் ராஜா, அடுக்கம் கிராம நிா்வாக அலுவலா் ரகுவரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!

கொடைக்கானலில் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே காா் கவிழ்ந்து 4 போ் காயம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


