விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பெண்ணிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

News image

கைது

Updated On :9 பிப்ரவரி 2026, 7:16 pm

Chennai

பழனி, பிப். 2: பழனியில் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பேசியை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனி பேருந்து நிலையத்தில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இருவா் பெண்ணிடம் கைப்பேசியை திருடியதாக சிலா் தகராறி ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், இவா்கள் இருவரும் விருதுநகா் மாவட்டம், அத்திக்குளத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் (45), திருச்சி மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த கணேஷ்குமாா் (33) என்பது தெரியவந்தது. இவா்கள் பெண்ணிடம் கைப்பேசியைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, சிறையிலடைத்தனா்.

கைது செய்யப்பட்ட இருவா் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.