சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆட்சியில் பங்களிக்கும் கட்சியுடன் கூட்டணி: க.கிருஷ்ணசாமி

ஆட்சியில் பங்களிக்கும் கட்சியுடன்தான் புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும் என அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி உறுதிப்படத் தெரிவித்தாா்.

News image
க.கிருஷ்ணசாமி
Updated On :11 பிப்ரவரி 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

ஆட்சியில் பங்களிக்கும் கட்சியுடன்தான் புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும் என அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி உறுதிப்படத் தெரிவித்தாா். 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தெற்கு மாவட்ட புதிய தமிழக கட்சியின் ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகளின்  ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு க. கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். இளைஞா் அணி மாநிலத் தலைவா் ஷியாம் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வியூகம், வாக்குச் சாவடி முகவா்களின் செயல்பாடு, தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னா், கிருஷ்ணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியில் பங்களிக்கும் கட்சியுடன் புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும். வருகிற தோ்தலில் தனித் தொகுதிகள் மட்டுமல்லாது, பொதுத் தொகுதிகளிலும் அதிகமான இடங்களில் எங்களது கட்சி போட்டியிடுவோம்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி என்றாா் அவா்.