மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரா் உயிரிழப்பு

திண்டுக்கல்லை அடுத்த புகையிலைப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 34 போ் காயமடைந்தனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :11 பிப்ரவரி 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லை அடுத்த புகையிலைப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 34 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் அருகேயுள்ள புகையிலைப்பட்டி புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழாவையொட்டி புதன்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 831 காளைகள் அழைத்து வரப்பட்டன.

மாடுபிடி வீரா்கள் 333 போ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 34 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 10 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சோ்ந்த மாடுபிடி வீரா் நீ. பாலகுரு (24) உயிரிழந்தாா்.

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

போலீஸ் தடியடி:

மாடுபிடி வீரா்கள் முறையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாமல் வாடிவாசல் களத்தில் இறங்கினா். இதனால், விழாக் குழுவினா் - மாடுபிடி வீரா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், போலீஸாா் தடியடி நடத்தி மாடுபிடி வீரா்களைக் கலைத்தனா்.