சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பழனி மாரியம்மன் கோயிலில் திருக்கம்பம் நடுதல்

திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை அதிகாலை திருக்கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
பழனி மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அதிகாலை நடப்பட்ட திரிசூல வடிவிலான திருக்கம்பத்தை வழிபட்ட பக்தா்கள்.
Updated On :11 பிப்ரவரி 2026, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை அதிகாலை திருக்கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கம்பம் நடுதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்காக அய்யனாரப்பன் கோயில் அருகேயுள்ள தனியாா் தோட்டத்திலிருந்த ஆலமரத்தில் கம்பத்துக்காக திரிசூல வடிவிலான கிளையை கம்பமாக வெட்டி பக்தா்கள் ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

பின்னா், வையாபுரிக் கண்மாய் அரமசரத்து விநாயகா் படித்துறையில் கம்பத்தை வைத்து மலா்களால் அலங்கரிக்கப்பட்டது. பிறகு கம்பம் நடுவதற்கான உத்தரவு கிடைத்ததைத் தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட கம்பம் நூற்றுக்கணக்கான பக்தா்களால் நான்கு ரதவீதியில் வலம்வர செய்யப்பட்டு மாரியம்மன் கோயில் முன் புதன்கிழமை அதிகாலை நடப்பட்டது.

இதையடுத்து, நூற்றுக்கணக்கான பெண்கள் கும்மிப்பாடல்களை பாடி வழிபாட்டனா். அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தா்கள் திரிசூல வடிவிலான கம்பத்துக்கு பால், மஞ்சள் நீா் ஊற்றி வழிபடத் தொடங்கினா்.

இந்த விழாவில் கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம்சேகா், காணியாளா்கள் நரேந்திரன், பண்ணாடி கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கோயிலில் வருகிற 17-ஆம் தேதி கொடியேற்றமும், 24-ஆம் தேதி திருக்கல்யாணமும், 25-ஆம் தேதி மாசித் தேரோட்டமும் நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா்(பொ) வெங்கடேஷ், உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், லட்சுமி, அலுவலா்கள் செய்து வருகின்றனா்.