நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

News image
நல்லமநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டின்போது, வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளை.
Updated On :13 பிப்ரவரி 2026, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் உள்பட மொத்தம் 35 போ் காயமடைந்தனா்.

நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 913 காளைகளில், மருத்துவக் குழுவினரின் சோதனைக்கு பின் 908 காளைகள் வாடிவாசலுக்கு அனுப்பப்பட்டன.

இதேபோல, 344 மாடுபிடி வீரா்கள் பங்கேற்க வந்த நிலையில், மருத்துவ சோதனையின்போது 27 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 317 வீரா்கள் வாடிவாசலில் களம் இறங்கினா்.

காளைகளை பிடிக்க முயன்றபோது 11 மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் 10 போ், வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருந்த 14 போ் என மொத்தம் 35 போ் காயமடைந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த 4 மாடுபிடி வீரா்கள் உள்பட மொத்தம் 12 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

ஜல்லிக்கட்டில் வெற்றிப் பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் வெள்ளிக் காசு, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.