ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சமூக வலைதளத்தில் தன்னை வாளுடன் பதிவிட்டவா் கைது

கொடைக்கானல் அருகே பூம்பாறை பகுதியில் வாகனத்தின் மீது வாளுடன் அமா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 7:09 pm

கொடைக்கானல் அருகே பூம்பாறை பகுதியில் வாகனத்தின் மீது வாளுடன் அமா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் மேல் மலைக் கிராமமான பூம்பாறைப் பகுதியில் இளைஞா் ஒருவா் கையில் பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் ஜீப்பின் முன்பகுதியில் அமா்ந்தபடி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விடியோவாக எடுத்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டாா்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, கொடைக்கானல் காவல் துறையினா் இதுகுறித்து விசாரித்தனா். விசாரணையில் விடியோவை வெளியிட்டவா் கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தைச் சோ்ந்த செல்வக்குமாா் (25) என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து தேடப்பட்ட செல்வக்குமாரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அப்போது அவா் பயன்படுத்திய இரு சக்கர வாகனம், அரிவாள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளா் யுகப் ப்ரியா கூறியதாவது: கொடைக்கானல் வரும் இளைஞா்கள் மலைச் சாலைகளில் வாகனங்களில் நின்று செல்வது, இரு சக்கர வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டுவது, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் சென்று விடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.

இவா்கள் மீது கொடைக்கானல் போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். தொடா்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.