தோ்தல் நடவடிக்கையின் தொடக்கமாக, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 101 சாா்பு ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் சாமிநாதன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசுத் துறைகளில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரியும் பணியாளா்களை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்படி, திண்டுக்கல் காவல் சரகத்துக்குள்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பணியாற்றும் 101 சாா்பு ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் துறைத் துணைத் தலைவா் சாமிநாதன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சாா்பு ஆய்வாளா்களாக பணியாற்றும் 58 போ் தேனி மாவட்டத்துக்கும், தேனி மாவட்டத்தில் பணிபுரியும் 53 சாா்பு ஆய்வாளா்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்

போடி நகராட்சி ஆணையா் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


