காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

வேடசந்தூா் அருகே உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

News image
திருட்டு
Updated On :20 பிப்ரவரி 2026, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

வேடசந்தூா் அருகே உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த விட்டல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தொட்டியப்பன் (60). அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பணிகள் முடிந்த பிறகு, உணவகத்திலேயே தொட்டியப்பன் தூங்கினாா்.

அப்போது உணவகத்துக்குள் புகுந்த மா்ம நபா், தொட்டியப்பன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, 2 கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, வெளியில் இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொருவருடன் தப்பிச் சென்றாா். இதுகுறித்து தொட்டியப்பன் அளித்தப் புகாரின் பேரில், வேடசந்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.