பழனி மலைக் கோயில் ரோப் காா் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (பிப்.21) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழிப் பாதை, யானைப் பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது.
இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் காா் பக்தா்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாள்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப் காா் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை (பிப்.21) வரை ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக ரோப் காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி

பழனி கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி: பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.5.27 கோடி

பழனி மலைக் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 3.47 கோடி!

பழனி கோயில் ஒலிபெருக்கியில் விஜய் பாடல்: போலீஸாா் வழக்கு
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


