ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கொடைக்கானல் மலைச் சாலையில் தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து

News image
கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் வடகரைப்பாறை அருகே விபத்துக்குள்ளான காா்.
Updated On :21 பிப்ரவரி 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் அருகே சுற்றுலாப் பயணிகள் வந்த காா் தடுப்புச் சுவரில் மோதி சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் வடகரைப்பாறை அருகே சனிக்கிழமை வந்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் காா், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யாருக்கும் காயமில்லை. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

மலைச் சாலையில் அடா்த்தியான பகுதிகளில் சிமென்ட் கற்கள் பதிக்க வேண்டும். மழைக் காலங்களில் தாா்ச் சாலைகள் சேதமடைகிறது. எனவே, கொடைக்கானல்-பழனி-வத்தலகுண்டு மலைச் சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பாகவும், கட்டுப்பாட்டுடன் செல்வதற்கு வட்டார போக்குவரத்து துறையினரும், காவல்துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.