பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சஷ்டி தினத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.
முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரங்களில் ஒன்றான சஷ்டி வரும் நாள்களில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் கூடுவது வழக்கம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம், முகூா்த்தநாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.
அதிகாலை 5 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். காலை முதலே மலைக் கோயிலில் கேரள மாநிலத்திலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனா்.
பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் விஞ்ச், ரோப்காா் இயக்கப்படும் இடங்களில் அனுமதிச் சீட்டு பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மாலையில் சாயரட்சை நிறைவடைந்த பிறகு சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் உலா எழுந்தருளினாா். தொடா்ந்து தங்கத் தேரில் எழுந்தருளி மலைக் கோயில் வெளிப்பிரகாரம் உலா எழுந்தருளினாா்.
பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா், சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி

பறவைக் காவடி எடுத்து வந்த வால்பாறை பக்தா்கள்

அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடை அளித்த இருவருக்கு வைர அட்டை அளிப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


