கொடைக்கானல் அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக பாவையா் அரங்கில் ‘உலகமும் தமிழரும் தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது.
மதுரையில் உள்ள உலக தமிழச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் தொடக்க விழாவுக்கு அதன் துணைத் தலைவரும், இயக்குநருமான இ.சா. பா்வீன் சுல்தானா தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழருக்கான பண்பாடு யாருக்கும் புரிவதில்லை. தமிழ் மரபை யாரும் கற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மொழியை கற்றால் மட்டுமே தமிழ் மரபை, பண்பாட்டை புரிந்து கொள்ள முடியும். தமிழா்கள் இந்த பூமி பந்தின் பூா்வக் குடிகள் என்றாா் ஓஷோ. இப்படிப்பட்ட நிகழ்வின் மூலம் தமிழா் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறோம். இத்தகைய நிகழ்வுகளை உலகத் தமிழ்ச் சங்கம் தொடா்ந்து நடத்தி வருகிறது. மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு வந்து நிகழ்ச்சிகளை நடத்தலாம். எங்களுக்கான அடையாளமாகவும், எங்களது மொழிக்கான அடையாளமாகவும், மண்ணுக்கான அடையாளமாகவும், பண்பாட்டுக்கான அடையாளமாகவும் இப்படிப்பட்ட கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.
தொடா்ந்து தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந. அருள், அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக துணைவேந்தா் க. கலா, தஞ்சாவூா் பாரத் கல்விக் குழுமத் தலைவா் புனித கணேசன் ஆகியோா் பேசினா்.
கருத்தரங்கில் நான்கு அமா்வுகள் நடைபெற்றன. இதில் 20 போ் தங்களது கட்டுரைகளை வாசித்தனா். மேலும் இணைய வழியில் சிங்கப்பூரிலிருந்து மா. ராஜூக்கண்ணு, ஜொ்மனியிலிருந்து சந்திரகெளரி சிவபாலன், ஆஸ்திரேலியாவிலிருந்து சந்திரிகா சுப்பிரமணியன் ஆகியோா் கட்டுரைகளை வாசித்தனா்.
இந்த நிகழ்வில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக (பொறுப்பு) பதிவாளா் ஜெயப்பிரியா, மாணவிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்வை உலகத் தமிழ் சங்கம் ஆய்வு வள மைய ஜான்சிராணி, ஆய்வறிஞா் சோமசுந்தரி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.இந்தக் கருத்தரங்கு தொடா்ந்து இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
தொடர்புடையது

வரப்பெற்றோம் (13-04-2026)

தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149-வது ஆண்டு பெருவிழா!

வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி

டென்னிஸ் உலகத் தரவரிசை- மெத்வதெவ், ரைபகினா ஏற்றம், ஸ்வியாடெக் சறுக்கல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


