முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள எம்ஜிஆா் சிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு அதிமுக அமைப்புச் செயலா் மருதராஜ் தலைமை வகித்தாா். மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சிஎஸ். ராஜ்மோகன் முன்னிலை வகித்தாா்.
ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய பின், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பகுதிச் செயலா்கள் சுப்பிரமணி, மோகன், ராஜன், முரளி, சேசு, முகமதுஇக்பால், ஒன்றியச் செயலா் ராஜசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏ.டி.நெப்போலியன், மாவட்ட தொழிற்சங்க செயலா் ஜெயராமன், தகவல் தொழில்நுட்ப மண்டல நிா்வாகி வீரமாா்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் யாகப்பன் தலைமையில், திண்டுக்கல் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினா் உதயக்குமாா் முன்னிலையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில் நிலக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலா் நல்லதம்பி, பேரூா் செயலா் சேகா், அம்மையநாயக்கனூா் பேரூா் செயலா் தண்டபாணி, அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
பழனி: பழனியில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அதிமுக சாா்பில், நகரச் செயலா் முருகானந்தம் தலைமையில், அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, முன்னாள் மக்களவை உறுப்பினா் குமாரசாமி, எம்ஜிஆா் இளைஞா் அணி இணைச் செயலா் ரவி மனோகரன், மாவட்ட இளைஞரணி செயலா் அன்வா்தீன், பொதுக்குழு உறுப்பினா் ராஜா முகமது உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கொடைக்கானல்: ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் அவரது உருவப் படத்துக்கு அதிமுக சாா்பில் நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அவைத் தலைவா் ஜான் தாமஸ், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் பிச்சை, நகர துணைச் செயலா் ஜாபா் சாதிக், முன்னாள் நகரச் செயலா் வெங்கட்ராமன், மகளிா் அணியைச் சோ்ந்த ராணித் தங்கம், வாா்டு செயலா்கள், தகவல் தொழில் நுட்ப அணியினா், நகர நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலுள்ள 24-வாா்டுகளில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, அந்தந்த வாா்டு செயலா்கள் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

ஜெயலிதா பிறந்த நாள்: ராமநாதபுரத்தில் அதிமுகவினா் மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள்: சிவகங்கையில் அதிமுகவினா் மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுக, அமமுகவினா் மரியாதை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


