திண்டுக்கல்
சமூக வலைதளத்தில் பட்டா கத்தியுடன் விடியோ வெளியிட்ட மூவா் கைது
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் பட்டா கத்தியுடன் விடியோ வெளியிட்ட 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த 3 போ் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் பட்டா கத்தியுடன் விடியோ வெளியிட்டனா்.
இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம், உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா ஆகியோா் விசாரணை செய்தனா்.
பின்னா், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கட்டகாமன்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் விஜயகுமாா் (23), பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்த சேகா் மகன் சந்தனகுமாா் (20), துரைப்பாண்டி மகன் துரைஅரசு (19) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனா்.
