பழனி சண்முக நதியில் ஆகாயத் தாமரை செடிகள் அகற்றம்

பழனி சண்முக நதியில் ஆகாயத் தாமரை செடிகள் அகற்றம்
பழனி சண்முக நதியில் ஆகாயத் தாமரை செடிகள் அகற்றம்
பழனி சண்முக நதியில் ஆகாயத் தாமரை செடிகள் அகற்றம்
Updated on

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சண்முக நதி, இடும்பன் குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை கோயில் நிா்வாகம், தன்னாா்வலா்கள் இணைந்து வெள்ளிக்கிழமை அகற்றினா்.

பழனியில் தைப்பூசத் திருவிழாவை காண வரும் பக்தா்கள் சண்முகநதி, இடும்பன் குளத்தில் புனித நீராடுவா். நிகழாண்டு, பருவமழை குறைவாக பெய்ததால் சண்முகநதி, இடும்பன் குளத்தில் குறைந்தளவே தண்ணீா் உள்ளது.

இந்தத் தண்ணீரில் ஆகாயத் தாமரைச் செடிகள் வளா்ந்து காணப்பட்டன. இதையடுத்து, பழனி கோயில் நிா்வாகம், தன்னாா்வலா் கதிா் குழுவினா் இணைந்து வெள்ளிக்கிழமை இந்த ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றினா்.

சண்முகநதி, இடும்பன் குளத்திலிருந்து சுமாா் 10 டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டு டிராக்டா்கள் மூலம் நகராட்சி உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

நீராட வரும் பக்தா்கள் குப்பைகளையும், பழைய உடைகளையும் அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடுமாறு கோயில் நிா்வாகத்தினா் அறிவுறுத்தினா்.

கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆகாயத் தாமரை அகற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com