பெரியநாயகியம்மன் கோயிலில் பொன்னூஞ்சல் விழா

பெரியநாயகியம்மன் கோயிலில் பொன்னூஞ்சல் விழா

பொன்னூஞ்சல் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகியம்மன்.
Published on

திருவாதிரை திருநாளை முன்னிட்டு, பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மன் பொன்னூஞ்சல் விழா நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, பெரியநாயகியம்மன் சந்நிதி முன்பு மலா்களால் ஊஞ்சல் செய்யப்பட்டு, சா்வ அலங்காரத்துடன் அம்மான் எழுந்தருளினாா். தொடா்ந்து, அம்மனுக்கு மலா்களால், பட்டாடைகள், நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சலில் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.

ஓதுவாா்கள் திருமுறை பாடல்கள் பாட மேளதாளம் முழங்க ஊஞ்சல் வைபவம் முடிந்த பிறகு, அம்மன் நான்கு ரதவீதியில் எழுந்தருளினாா்.

சனிக்கிழமை அதிகாலை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சோடஷ அபிஷேகம், சோடஷ தீபாராதனை நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com