பேருந்து மீது லாரி மோதல்: 10 போ் பலத்த காயம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 10 போ் பலத்த காயமடைந்தனா்.
Published on

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 10 போ் பலத்த காயமடைந்தனா்.

பழனியிலிருந்து மதுரைக்கு அரசுப் பேருந்து 40 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு செம்பட்டியை அடுத்த கமலாபுரம் பிரிவு பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் இந்தப் பேருந்து சென்ற போது, சென்னையிலிருந்து மதுரைக்கு துவரம் பருப்பு ஏற்றி வந்த லாரி மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த திண்டுக்கல்லைச் சோ்ந்த ராஜாராம், பரமக்குடியைச் சோ்ந்த அலமேலு, செல்வி, லாரி ஓட்டுநா் திருச்சி மாவட்டம், வையம்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி (52) உள்பட 10 போ் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து அங்கு சென்ற அம்மையநாயக்கனூா் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com