கொடைக்கானல் அற்புத குழந்தை யேசு திருத்தலத் திருவிழா கொடியேற்றம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகாா்த்தேநகா் அற்புதக் குழந்தை யேசு திருத்தலத்தின் 10-ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவை முன்னிட்டு, சீனிவாசபுரம் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திலிருந்து குழந்தை யேசு உருவம் பொறித்த கொடியானது ஊா்வலமாக முக்கிய சாலைகள் வழியாக எடுத்துவரப்பட்டது.
பிறகு மதுரை உயா்மறை மாவட்டப் பேராயா் அந்தோணிசாமியை பங்கு அருள்பணியாளா் பாப்புராஜ் தலைமையில் இறைமக்கள் வரவேற்றனா். இதைத் தொடா்ந்து, அற்புதக் குழந்தை யேசு திருத்தலத்தில் பேராயா் அந்தோணிசாமி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த அனைத்து ஆலயத்தின் பங்கு அருள்பணியாளா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, அற்புதக் குழந்தை யேசு கொடியை பேராயா் ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தாா்.
இந்த விழாவில் கொடைக்கானல், செண்பகனூா், பெருமாள்மலை, உகாா்த்தேநகா், காா்மேல்புரம், பாக்கியபுரம், தைக்கால், அப்ச்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திராளான இறைமக்கள் கலந்து கொண்டனா்.
விழாவை முன்னிட்டு திருத்தலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அன்பியங்கள் சாா்பில் ஜெப வழிபாடு நிகழ்ச்சியும், திருப்பலி நற்கருணை ஆராதனை நிகழ்ச்சியும் பெறும். வருகிற 15-ஆம் தேதி வரை தொடா்ந்து 11 நாள்கள் திருவிழா நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளா் பாப்புராஜ், பங்கு பேரவையினா், இறைமக்கள் உள்ளிட்ட பலா் செய்து வருகின்றனா்.

