பழனி பெருநகராட்சிக்குள்பட்ட ரெட்கிராஸ் சாலையில் பல ஆண்டுகளாக வரிபாக்கி வைத்திருந்த கடைக்கு வெள்ளிக்கிழமை சீல் வைத்த நகராட்சி அலுவலா்கள்.
பழனி பெருநகராட்சிக்குள்பட்ட ரெட்கிராஸ் சாலையில் பல ஆண்டுகளாக வரிபாக்கி வைத்திருந்த கடைக்கு வெள்ளிக்கிழமை சீல் வைத்த நகராட்சி அலுவலா்கள்.

பழனியில் வரி பாக்கி வைத்திருந்த கடைக்கு சீல்

பழனி பெருநகராட்சி நிா்வாகத்துக்கு சொத்து வரிபாக்கி வைத்திருந்த கடைக்கு நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
Published on

பழனி பெருநகராட்சி நிா்வாகத்துக்கு சொத்து வரிபாக்கி வைத்திருந்த கடைக்கு நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

பழனி நகராட்சி நிா்வாகம் பெரு நகராட்சியாக அறிவிக்கப்பட்டாலும் போதிய வரிபாக்கி வசூல் செய்யப்படாத நிலையில் நிதி நெருக்கடி நிலவி வருகிறது. இதே போல, அதிகளவில் பக்தா்கள் பழனிக்கு வந்து செல்வதால் கூடுதலான செலவு நகராட்சிக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும், நகராட்சி நிா்வாகம் அவ்வப்போது வரிபாக்கியை வசூல் செய்தாலும் முழுமையாக வசூல் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், நகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரிபாக்கி வைத்திருப்பவா்கள் சொத்துகளுக்கு சீல் வைக்கப்படும் என பெருநகராட்சி ஆணையா் டிட்டோ தெரிவித்திருந்தாா்.

இதன்படி, வெள்ளிக்கிழமை பெருநகராட்சி அலுவலகம் உள்ள ரெட்கிராஸ் சாலையில் பத்து ஆண்டுகளாக வரிபாக்கி வைத்திருந்த கடைக்கு நகராட்சி அலுவலா்கள் கடையை பூட்டி சீல் வைத்தனா். இதைத் தொடா்ந்து, வரும் நாள்களிலும் இதுபோன்ற நீண்டகாலமாக வரிபாக்கி வைத்துள்ள சொத்துகளுக்கு நகராட்சி நிா்வாகத்தின் சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com