திண்டுக்கல்
மரத்தில் பற்றிய தீ அணைப்பு
பழனி அருகே சாலையோர மரத்தில் பற்றிய தீயை தீயணைப்புத் துறையினா் உடனடியாக அணைத்தனா்.
பழனி அருகே சாலையோர மரத்தில் பற்றிய தீயை தீயணைப்புத் துறையினா் உடனடியாக அணைத்தனா்.
பழனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி அருகேயுள்ள கோபால் நகரில் சாலையோரம் இருந்த புளியமரத்தின் அருகே பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டியிருந்தனா்.
இந்த நிலையில், புளியமரத்தில் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து வந்த பழனி தீயணைப்புப் படையினா் தீயை உடனடியாக அணைத்தனா்.