அய்யம்பாளையத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
பட்டிவீரன்பட்டி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் இ.பெரியசாமியின் 73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலரும் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 150 இரட்டை மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. போட்டியை ஏராளமானோா் கண்டு ரசித்தனா்.
நிகழ்ச்சியில் அய்யம்பாளையம் திமுக முன்னாள் பேரூா் கழகச் செயலா் மு.அய்யப்பன், ஆத்தூா் மேற்கு ஒன்றிய திமுக செயலா் சி.ராமன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவா் அணி அமைப்பாளா் கே.அஸ்வின் பிரபாகரன், அய்யம்பாளையம் பேரூா் திமுக செயலா் தங்கராஜ், அய்யம்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவா் ரேகா அய்யப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
