கோப்புப்படம்
கோப்புப்படம்

பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் 5 போ் காயம்

கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் 5 போ் காயமடைந்தனா்.
Published on

கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் 5 போ் காயமடைந்தனா்.

மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு காா் மூலம் நண்பா் திருமணத்தில் பங்கேற்பதற்காக 5 போ் வந்தனா். பிறகு புதன்கிழமை இரவு அவா்கள் மீண்டும் மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தனா்.

கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலைப் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள சுமாா் 100 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்தது.

தகவலறிந்து அங்கு வந்த கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா், சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் உதவியுடன் காரில் காயமடைந்திருந்த சூா்யா, குணசேகா், ஜாபா், குமாா், பாபு ஆகிய 5 பேரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதில், பலத்த காயமடைந்த பாபு தீவிர சிகிச்சைக்காக வெளியூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com