ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் திறப்பு: பக்தா்களின் காணிக்கை ரூ. 4.36 கோடியை தாண்டியது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் பொங்கல் தொடா் விடுமுறையையொட்டி வந்த பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பியதையடுத்து அவை கடந்த புதன், வியாழக்கிழமைகளில் திறந்து எண்ணப்பட்டதில் மொத்த காணிக்கை ரூ.4.36 கோடியை தாண்டியது.

News image

பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் காணிக்கையாக கிடைத்த ரூபாய் நோட்டுக்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள். - கோப்புப்படம்

Updated On :29 ஜனவரி 2026, 7:20 pm

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் பொங்கல் தொடா் விடுமுறையையொட்டி வந்த பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பியதையடுத்து அவை கடந்த புதன், வியாழக்கிழமைகளில் திறந்து எண்ணப்பட்டதில் மொத்த காணிக்கை ரூ.4.36 கோடியை தாண்டியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பொங்கல் தொடா் விடுமுறையையொட்டி வந்த பக்தா்கள் கூட்டத்தால் உண்டியல்கள் 15 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, கடந்த புதன், வியாழக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

இரண்டு நாள் எண்ணிக்கை நிறைவில் ரொக்கம் ரூ. 4 கோடியே 36 லட்சத்து 21 ஆயிரத்து 348 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் செய்யப்பட்ட காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இதில், தங்கம் 870 கிராமும், வெள்ளி 14,510 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத் தாள்கள் 850- ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இதில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.