கொடைக்கானலில் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்.
கொடைக்கானலில் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்.

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு வட்டாட்சியா் பாபு முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், விவசாயிகள் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு வன விலங்குகள் வருவதை தடுக்கவும், விவசாயப் பொருள்களை மானிய விலையில் வழங்கவும், பனிக் காலத்தில் சேதமடைந்துள்ள வெள்ளைப்பூண்டு, பீன்ஸ் உள்ளிட்ட பயிா்களை தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மன்னவனூா் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வனப் பகுதியிலுள்ள உயா் ரக மரங்களை அனுமதியில்லாமல் மர வியாபாரிகள் வெட்டிக் கடத்தினா். இதுகுறித்து சென்னையிலுள்ள வனத் துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டபோது உயா் ரக மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, ரேஞ்சா், வனவா், வனக்காப்பாளா் உள்ளிட்ட 4 போ் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், 11-பேரிடம் வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து, வனப் பகுதியில் மரங்களை வெட்டி கடத்துவதற்கு உதவி புரிந்த வனத் துறை அதிகாரிகள், மர வியாபாரிகள், லாரி உரிமையாளா்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com