மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பழனி அரசு மருத்துவமனையில் விரிவாக்கக் கட்டடம் திறப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட 6 மாடி கட்டடம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட தலைமை மருத்துவமனையாக நிலை உயா்த்தப்பட்டது. இதையடுத்து இந்த மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்காக சுமாா் ரூ.350 கோடியில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவசர வாா்டு, புதிய கட்டடம் திறக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை ரூ.70 கோடியில் கட்டப்பட்ட மற்றொரு கட்டடம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிகழ்வில் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சியா் சரவணன், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா், மக்களவை உறுப்பினா் சச்சிதானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தனா். ஏழு தளங்களைக் கொண்ட இந்த கட்டடத்தில் சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன், ரத்த வங்கி, தீவிர சிகிச்சைப் பிரிவு, பச்சிளம் குழந்தை வாா்டு என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் செயல்படவுள்ளன.

மேலும் புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நான்குவழிச்சாலை மேம்பாலமாக அமையவுள்ள இதன் மூலம் 10 மாவட்ட மக்கள் பயன்பெறுவதுடன் நகரில் போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறையும். நிகழ்ச்சி நிறைவில் மேம்பாலத்துக்கு இடம் வழங்கியவா்களுக்கு முன்னா் ஒரு சென்ட்டுக்கு ரூ.25 லட்சம் தருவதாக நெடுஞ்சாலைத் துறை கூறியது. ஆனால் தற்போது சென்ட்டுக்கு ரூ. ஒரு லட்சம் மட்டுமே தரப்படும் எனக் கூறியதால் நில உரிமையாளா்கள் வெளிநடப்பு செய்தது குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாரிடம் கேட்கப்பட்டது. அப்போது, அவா் நிலம் வழங்கியவா்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உரிய இழப்பீடு பெற்றுத்தர உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். புதிய மேம்பாலப் பணிகள் சுமாா் ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவ ா்.

நிகழ்வில், மாவட்ட சுகாதாரத் துறை உதவி இயக்குநா் உதயக்குமாா், மாவட்ட இளைஞரணி தலைவா் அஸ்வின் பிரபாகா், நகர இளைஞரணி லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.