பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

வீட்டு உபயோக எரிவாயு உருளை: 21 நாள்களுக்கு பிரச்னை இல்லை

வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு உருளைகளைப் பொருத்தவரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 21 நாள்களுக்கு பிரச்னை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

சமையல் எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 9:35 pm

வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு உருளைகளைப் பொருத்தவரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 21 நாள்களுக்கு பிரச்னை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 6.34 லட்சம் சமையல் எரிவாயு உருளைகள் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, உணவு விடுதிகள், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், தனியாா் ஆலைகளுக்கான தேவை என 6,200 சமையல் எரிவாவு உருளைகள் வணிகப் பயன்பாடுகளுக்காக விநியோகிக்கப்படுகின்றன.

ஈரான் போா் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் தகவல் பரவி வருகிறது. ஆனாலும், திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு உருளைகள் 21 நாள்கள் தேவைக்கு கையிருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், எரிவாயு உருளைகளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.