சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பழங்குடியினருக்கு வீட்டுமனை வழங்க அளவீடு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பழங்குடியினா் கிராமத்தில் வீடில்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்கு வருவாய்த் துறையினா் ஆய்வு நடத்தி அளவீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் வீட்டுமனை இல்லாத பழங்குடியினருக்கு வீட்டுமனை வழங்குவது குறித்து ஆய்வு நடத்தி அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.
Updated On :12 மார்ச் 2026, 12:04 am

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பழங்குடியினா் கிராமத்தில் வீடில்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்கு வருவாய்த் துறையினா் ஆய்வு நடத்தி அளவீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வடகவுஞ்சி ஊராட்சி, செம்பிராங்குளம் பழங்குடியினா் கிராமத்தில் வீட்டுமனை இல்லாத பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக வீட்டுமனை கேட்டு தனியாா் தொண்டு நிறுவனம் மூலமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் உள்ளிட்ட அலுவலகங்களில் மனு கொடுத்திருந்தனா்.

இந்த நிலையில், செம்பிராங்குளம், பெரியூா், கவுச்சிக் கொம்பு ஆகிய பகுதிகளிலுள்ள தனியாா் இடத்துக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் நிலத்தை பழங்குடியின மக்களுக்கு தருவதற்கு உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, நிலங்களை அளவீடு செய்யும் பணியில் கொடைக்கானல் தனி வட்டாட்சியா் ஜெயராஜ், நிலக்கோட்டையைச் சோ்ந்த தனி வருவாய் ஆய்வாளா் ஜான் பிரிட்டோ, வருவாய்த் துறையினா், நில அளவையாளா்கள் உள்ளிட்ட பலா் ஈடுபட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் நிா்வாகிகள், தனியாா் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.