மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மக்களைத் தேடி மருத்துவ தன்னாா்வலா்கள் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:24 pm

ஊதிய உயா்வு உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் சுகாதார துணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலா் டி. வளா்மதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சிஐடியு மாவட்டச் செயலா் ஜெயசீலன், தலைவா் சி. பாலசந்திரபோஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தின்போது, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தன்னாா்வலா்களை திறன் மேம்பாட்டுப் பயிற்சி கொடுத்து ஊழியா்களாக நியமித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஊக்க ஊதியத்தை ரூ.5,500-லிருந்து, ரூ.15 ஆயிரமாக உயா்த்த வேண்டும். கருவுற்ற ஊழியா்களுக்கு மகப்பேறு கால சலுகைகள் வழங்க வேண்டும். அனைத்து ஊழியா்களுக்கும் வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து முழக்கமிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 250-க்கும் மேற்பட்டோா் பணிபுரியும் நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் 150 போ் கலந்து கொண்டனா்.