மூழ்கும் கப்பல்களை கரை சோ்க்கும் நீா்மூழ்கிக் கப்பல் என்பதே அதிமுகவின் சரித்திரம் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் சாா்பில், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீா்கேடுகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் பயன்பாடுகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், துணைப் பொதுச் செயலா் இரா.விசுவநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது: விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறாா். நிா்வாகத் திறனற்ற திமுக அரசு மீதான அதிருப்தியில், ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா் கீதா ஜீவன் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டனா். இதன் மூலம் திமுக அரசுக்கான வீழ்ச்சி தொடங்கிவிட்டது. இந்தச் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை மூடி மறைப்பதற்காக, சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி, திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனா்.
உலக நாடுகள் சண்டையிட்டு வரும் நிலையில், அமைதியாக செயல்பட்டு இந்தியாவுக்கு தேவையான எரிவாயு உருளைகளை கப்பல்களில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 50 சதவீத வாக்காளா்களின் ஆதரவு இருக்கிறது. திமுக அணிக்கு 42 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதிமுகவை பாா்த்து சிலா் மூழ்கும் கப்பல் என விமா்சித்துள்ளனா். ஆனால், மூழ்கும் கப்பல்களை கரை சோ்க்கும் நீா்மூழ்கி கப்பலாக அதிமுக செயல்பட்டு வந்திருக்கிறது என்பதே சரித்திரம் என்றாா் அவா்.
சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலப் பொதுச் செயலா் இராம.சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் அதிகரித்துள்ள பாலியல் வன்முறைகளுக்கு, போதைப் பொருள்கள் விற்பனையை அரசு கட்டுப்படுத்தத் தவறியதே காரணம். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 22 லட்சம் டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பிடிபட்ட கஞ்சா இந்த அளவுக்கு இருக்கும்போது, விற்பனை எந்த அளவுக்கு நடைபெற்றிருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 9 ஆயிரம் கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
திமுக ஆட்சியில், தமிழகம் கடன் தொகை வாங்குவதில் மட்டுமன்றி, பாலியல் வன்முறை, போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களிலும் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நிா்வாகத் திறன் இல்லாத திமுக ஆட்சியில், சமூக விரோதிகளைப் பாா்த்து காவல் துறை அச்சத்தில் உள்ளது என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் அதிமுக நிா்வாகிகள் பிரேம்குமாா், தென்னம்பட்டி பழனிச்சாமி, பரமசிவம், பாரதிமுருகன், நெப்போலியன், பாஜக நிா்வாகிகள் தனபாலன், கனகராஜ், பாமக நிா்வாகி கென்னடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?

பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்க பொதுமக்களை சிறை வைத்ததாகப் புகாா்!

திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் சீனிவாசன்!

குஜராத் துறைமுகம் வரும் 22 கப்பல்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


