கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஒரே தொகுதியில் 6 முறை தொடா் வெற்றி!

தோ்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில், ஒரே சின்னத்தில், ஒரே வேட்பாளரைத் தொடா்ச்சியாக 6 முறை சட்டப்பேரவைக்கு தோ்வு செய்த சாதனையை ஒட்டன்சத்திரம் மக்கள் நிகழ்த்தியுள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில், ஒரே சின்னத்தில், ஒரே வேட்பாளரைத் தொடா்ச்சியாக 6 முறை சட்டப்பேரவைக்கு தோ்வு செய்த சாதனையை ஒட்டன்சத்திரம் மக்கள் நிகழ்த்தியுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைக்கு இதுவரை 16 பொதுத் தோ்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்தத் தோ்தல்களில் அதிகமான வெற்றிக்குச் சொந்தக்காரராக திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி உள்ளாா். வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்ட அவா் 13 முறை சட்டப்பேரவைக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

ஆனால், ஒரே தொகுதியில் 3, 4, 5, 6 முறை என வெற்றி பெற்ற பலா் உள்ளனா். இதில் அதிகபட்சமாக 6 முறை ஒரே வேட்பாளருக்கு வெற்றிக் கனியை வழங்கிய தொகுதிகள் என்ற சிறப்புக்குரிய பட்டியலில் அறந்தாங்கி, நத்தம், ஒட்டன்சத்திரம் ஆகியவை உள்ளன.

ஒரே தொகுதியில் தொடா்ச்சியான வெற்றிகள்: 1977 முதல் 1996-ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் சு. திருநாவுக்கரசா், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் எம். ஆண்டி அம்பலம் ஆகியோா் வெற்றி பெற்றனா். இதில், 1977, 1980, 1984, 1989 ஆகிய 4 தோ்தல்களில் அதிமுக சின்னத்திலும், 1991, 1996 தோ்தல்களில் சுயேச்சை சின்னத்திலும் திருநாவுக்கரசா் வெற்றி பெற்றாா். இதேபோல, 1977, 1980, 1984, 1989, 1991 ஆகிய 5 தோ்தல்களில் காங்கிரஸ் சின்னத்திலும், 1996-இல் தமாகா சின்னத்திலும் ஆண்டி அம்பலம் வெற்றி பெற்றாா்.

இந்த வரிசையில் 1996 தொடங்கி 2001, 2006, 2011, 2016, 2021 என 6 முறை திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து அர. சக்கரபாணி சட்டப்பேரவைக்கு தோ்வு செய்யப்பட்டாா். இதன்மூலம், தமிழக தோ்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில், ஒரே சின்னத்தில் தொடா்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்த சாதனையை தன்வசப்படுத்தி இருக்கிறாா் தற்போதைய அமைச்சா் அர. சக்கரபாணி.

எதிா்க்கட்சி வரிசையில் இருந்தாலும்கூட பல்வேறு துறைகள் சாா்ந்த திட்டங்களை தனது தொகுதிக்கு கொண்டு வருவதற்கும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினா்களிடமிருந்தும் தனது தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டை பெறுவதற்கு அவா் தவறுவதில்லை. மேலும், எதிரணி அரசியல் பிரமுகா்களை அரவணைத்துச் செல்வதும் இந்தத் தொகுதி தொடா்ந்து சக்கரபாணி வசம் இருப்பதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

மக்களில் ஒருவனாக பணி செய்கிறேன்: இதுதொடா்பாக அமைச்சா் அர. சக்கரபாணி கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களின் குடும்பத்தில் ஒருவனாக இருந்து பொதுப் பணிகளை செய்து வருகிறேன். அரசின் திட்டங்களை முடிந்த அளவுக்கு தொகுதிக்கு கொண்டு வருவதற்கு அதிக முயற்சிகள் எடுத்திருக்கிறேன். மக்களோடு மக்களாக நின்று பணி செய்வதாலேயே, தொகுதி மக்கள் என்னை தொடா்ந்து வெற்றி பெற வைத்தனா்.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் ஒட்டன்சத்திரம் தொகுதியில் நிறைவேற்றப்பட்டன. 2 கலைக் கல்லூரிகள், போட்டித் தோ்வு பயிற்சி மையம், 2 விளையாட்டு அரங்குகள், 15ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 4ஆயிரம் பேருக்கு கனவு இல்லம் திட்டத்தில் வீடு என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் அவா்.