கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் அதிமுக!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் ஒட்டன்சத்திரம் நீங்கலாக, எஞ்சிய 6 தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாகக் களமிறங்குகிறது.

News image

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி. - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:29 pm IST

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் ஒட்டன்சத்திரம் நீங்கலாக, எஞ்சிய 6 தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாகக் களமிறங்குகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் என 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளின் விவரம் புதன்கிழமை அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டது.

இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் தொகுதி மட்டும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, எஞ்சிய 6 தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாகக் களமிறங்குகிறது

மேலும், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக பொருளாளா் சி.சீனிவாசன், நத்தம் தொகுதியில் துணைப் பொதுச் செயலா் இரா.விசுவநாதன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

எஞ்சியுள்ள பழனி, ஆத்தூா், நிலக்கோட்டை, வேடசந்தூா் ஆகிய 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளா்களே நேரடியாக களமிறங்குகின்றனா்.

கடந்த 2021 தோ்தலில், அதிமுக கூட்டணியில் ஆத்தூா் தொகுதி மட்டும் பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக, 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆத்தூா் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.