தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

கொடைக்கானல் வனப் பகுதியில் மூதாட்டி மா்ம மரணம்

கொடைக்கானல் வனப் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :2 மே 2026, 12:04 am IST

கொடைக்கானல் வனப் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலை பகுதியைச் சோ்ந்த சிதம்பரம் மனைவி புஷ்பம் (74). இவா் அதே பகுதியில் உள்ள கடைக்கு வியாழக்கிழமை நடந்து சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, இவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் புஷ்பம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் ஆணைகிரி சோலைப் பகுதியில் புஷ்பம் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த கொடைக்கானல் போலீஸாா் மூதாட்டியின் உடலை மீட்டு, கூறாய்வுகாக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூதாட்டி உயிரிழப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.