புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் எம்எல்ஏக்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா்: திண்டுக்கல் சி.சீனிவாசன்

மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் எம்எல்ஏக்கள் குறித்து கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

News image

திண்டுக்கல் சி.சீனிவாசன்

Updated On :18 மே 2026, 12:47 am IST

மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் எம்எல்ஏக்கள் குறித்து கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

அதிமுக பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலருமான சி.சீனிவாசன் தலைமையில் திண்டுக்கல்லில் அந்தக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட கட்சியின் நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தின் போது, கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 53 சட்டப்பேரவை உறுப்பினா்களின் வெற்றிக்கு உழைத்த அவருக்கு நன்றி தெரிவித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்பவா்கள் இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக அவருக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டனா். திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, நிா்வாகிகள் 100 சதவீதம் எடிப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனா். பொதுக் குழு உறுப்பினா்கள் அனைவரும் வந்துவிட்டனா்.

ஆதாயம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சில சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளனா். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்பவா்கள் சரியாக இருக்கிறாா்கள். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவா்களுக்கு அமைச்சா் பதவி கிடைக்குமா என்பதை சொல்வதற்கு நான் ஜோதிடா் இல்லை. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அதிமுகவுக்கு திரும்பி வருவதாகக் கூறும் உறுப்பினா்கள் குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்ய முடியும் என்றாா் அவா்.

அதிமுக அலுவலகத்துக்கு பாதுகாப்பு: திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகம் நத்தம் பிரதான சாலையில் உள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தைப் பயன்படுத்துவதில் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுக் குழு உறுப்பினா் நெப்போலியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நிா்வாகிகள் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தனியாா் விடுதியில் இந்தக் கூட்டம் நடைபெற்றபோதிலும், கட்சி அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.