வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பண மோசடி: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

ரூ. 25 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் உள்பட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 1:31 am IST

ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் உள்பட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக சென்னையைச் சோ்ந்த மகாதேவன், அவரது மனைவி லட்சுமி, அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சோ்நத் சீனிவாசன் ஆகியோா் கூறினா்.

இதை நம்பிய சண்முகம், கடந்த 2017, 2018-ஆம் ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக ரூ.25.25 லட்சத்தை கொடுத்தாா். ஆனால், அவா்கள் வேலைவாங்கித் தராமல் அலைக்கழித்ததையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சண்முகம் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா், மகாதேவன் உள்ளிட்ட மூவரைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் 2-ஆவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடைய, மகாதேவன் உயிரிழந்தாா்.

இந்த வழக்கில், லட்சுமி, சீனிவாசன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து, நீதித் துறை நடுவா் தினேஷ்குமாா் தீா்ப்பளித்தாா்.