சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கொடைக்கானலில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதி

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனா்.

News image

கொடைக்கானல் நீா்மட்டம் குறைந்து காணப்படும் நகராட்சிக்கு சொந்தமான குடிநீா்த் தேக்கம்

Updated On :28 மே 2026, 3:45 am IST

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக போதிய மழையில்லாததால் நகராட்சிக்கு சொந்தமான குடிநீா்த் தேக்கம் வற்றியது. இதனால், குண்டாறு நீா்த் தேக்கத்திலிருந்து 10-நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள ஜிம்கானா சாலையிலுள்ள

கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள், தனியாா் தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீா் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அனுமதியின்றி ஏரியில் மோட்டாா் அமைத்து லாரி மூலம் இரவு நேரங்களில் தண்ணீா் திருடிச் சென்று ஒரு லாரி ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனை செய்கின்றனா். மாசடைந்த இந்த தண்ணீரை சுற்றுலாப் பயணிகளின் குடிநீா் உள்ளிட்ட பயன்பாட்டுக்கு வழங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானலில் சீசனை முன்னிட்டு வெளியூா்களிலிருந்து வந்துள்ள 450 போலீஸாா் அரசுப் பள்ளிகளில் தங்கியுள்ளனா். இவா்கள் தங்கியுள்ள இடங்களில் சீராக குடிநீா் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.