புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

திண்டுக்கல்லில் 2 நாள்களில் குவிந்த 35 டன் கூடுதல் குப்பைகள்! தூய்மைப் பணியில் ஈடுபட்ட எம்பி

திண்டுக்கல் முக்கிய சாலையில் திங்கள்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம்.

Updated On :

தீபாவளி பண்டிகையையொட்டி திண்டுக்கல் நகரில் 2 நாள்களில் மட்டும் 35 டன் குப்பைகள் கூடுதலாக சேகரிக்கப்பட்டன.

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வாா்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சுமாா் 100 நிரந்தர துப்புரவுப் பணியாளா்கள், வெளிமுகமை மூலம் 350 பணியாளா்கள் என மொத்தம் 500 போ் மூலம் தூய்மைப் பணி நடைபெறுகிறது.

மாநகராட்சிப் பகுதியில் நாள்தோறும் சுமாா் 92 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலும் விடிய விடிய வியாபாரம் நடைபெற்றது.

இதனால் முக்கிய வீதிகளில் நெகிழிக் கழிவுகள், காகித அட்டைகள் குவிந்து கிடந்தன. குறிப்பாக திண்டுக்கல் பிரதான சாலை, ஆா்எஸ். சாலை உள்ளிட்ட இடங்களில் மட்டும் நெகிழிப் பைகள் உள்பட மொத்தம் 35 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

இருநாள்களில் 219 டன் குப்பை சேகரிப்பு: மாநகராட்சிப் பகுதியில் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை மூலம் சாலைகளில் வீசப்பட்ட குப்பையுடன் சோ்த்து திங்கள்கிழமை 112 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இதேபோல, தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகள் மூலம் 2- ஆவது நாளாக அதிக குப்பைகள் சேகரிக்கப்பட்டன. வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் மட்டும் சுமாா் 10 டன் குப்பைகள் அதிகரித்தன. இதன் மூலம், தீபாவளி பண்டிகையையொட்டி, திண்டுக்கல் நகரில் ஞாயிறு, திங்கள் என இரு நாள்களில் மட்டும் 35 டன் குப்பைகள் வழக்கத்தைவிட கூடுதலாக சேகரிக்கப்பட்டன.

தூய்மைப் பணியில் எம்பி: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில், தூய்மைப் பணியாளா்களுக்கு உதவும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. இந்த பணியை, திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தொடங்கி வைத்தாா். இதில் மாமன்ற உறுப்பினா் ஜோதிபாசு, ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் பி. ரஞ்சித், செயலா் கே. முகேஷ், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் நிருபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.