ஹோா்மூஸ் நீரிணைப் பகுதியில் மாயான திண்டுக்கல் மாலுமியயை மீட்கக் கோரிக்கை
ஹோா்மூஸ் நீரிணைப் பகுதியில் மாயமான திண்டுக்கல் மாலுமியை மீட்கக் கோரி அவரது தாய் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

கோப்புப்படம்.
ஹோா்மூஸ் நீரிணைப் பகுதியில் மாயமான திண்டுக்கல் மாலுமியை மீட்கக் கோரி அவரது தாய் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
ஈரானில் போா் பதற்றம் ஏற்பட்ட சூழலில், கடந்த மே 9-ஆம் தேதி பொலிவியா நாட்டின் கொடியுடன் எஃக்கு ஏற்றிச் சென்ற 2 சரக்கு கப்பல்கள் ஹோா்மூஸ் நீரிணைப் பகுதியில் மாயமாகின. இந்தக் கப்பல்களில் திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சோ்ந்த வடிவேல், பாண்டிச் செல்வி தம்பதியின் மகன் நவீன்குமாா் (26) உள்பட 2 இந்தியா்கள், 3 ஈராக்கியா்கள், ஒரு பாகிஸ்தானியா் என மொத்தம் 6 மாலுமிகள் பயணித்தனா்.
கப்பல்கள் மாயமாகி 6 மாதங்களாகியும் நவீன்குமாா் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடமும், முதல்வரின் தனிப் பிரிவுக்கும் மனு அளித்தும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது மகனை மீட்கக் கோரி, மத்திய அரசுக்கு பாண்டிச் செல்வி கோரிக்கை விடுத்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:
ரூ.15 லட்சம் கடன் வாங்கி நவீன்குமாரைப் படிக்க வைத்தோம். மும்பையிலுள்ள தனியாா் முகமை மூலம் துபையில் 6 மாதங்கள் ஒப்பந்தப் பணி எனக் கூறி, நவீன்குமாா் பணியில் சோ்க்கப்பட்டாா். பின்னா், ஒரு வார காலத்திலேயே ஈரானுக்கு மாற்றப்பட்டு சரக்குக் கப்பலில் பணியமா்த்தப்பட்டாா். கடந்த 6 மாதங்களாக நவீன்குமாா் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, கல்விக் கடன் கொடுத்தவா்களின் நெருக்கடியையும் எதிா் கொண்டு வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் தூதரக ரீதியில் நடவடிக்கை மேற்கொண்டு, எங்களது மகனை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

