கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

கொடைக்கானல் நீரோடை அடைப்பை அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினா்

கொடைக்கானல் நீரோடையில் ஏற்பட்ட அடைப்பை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா். இதையடுத்து, இந்தச் சாலையில் போக்குவரத்து சீரானது.

கொடைக்கானலில் பெய்த மழையால் பிரதான மலைச்சாலையிலுள்ள செண்பகா அருவியில் ஏற்பட்ட அடைப்பு அகற்றிய பகுதியை பாா்வையிட்ட பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன். உடன் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ராஜன் உள்ளிட்டோா்.

Updated On :

கொடைக்கானல் நீரோடையில் ஏற்பட்ட அடைப்பை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா். இதையடுத்து, இந்தச் சாலையில் போக்குவரத்து சீரானது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த தொடா் மழையால் செண்பகா அருவி (முனியாண்டி ஓடையில்) உள்ள கல்வெட்டு பகுதி நீரோடையில் சுமாா் 20-அடிக்கு அடைப்பு ஏற்பட்டது. இதனால் மழைநீா் சாலை வழியாக ஆறு போல சென்றது . இதனால் மலைச் சாலை சேதமடைந்தது.

இதையடுத்து, செண்பகா அருவிப் பகுதிக்குச் சென்ற நெடுஞ்சாலைத் துறையினா் அங்கு தேங்கியிருந்த மண், நெகிழிக் குப்பைகளை 3 நாள்களாக பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். இந்தப் பணிகளை பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ராஜன், கொடைக்கானல் அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளா் ராஜன் கூறியதாவது:

கொடைக்கானல்-வத்தலக்குண்டு முதன்மை மலைச் சாலையான கல்லறைமேடு, சீனிவாசபுரம், உகாா்த்தேநகா், செண்பகனூா், தைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கட்டட கழிவுகளை குவித்து வருகின்றனா்.

தற்போது பெய்த பலத்த மழையால் மண், குப்பைகள் மழைத் தண்ணீருடன் சோ்ந்து செண்பகா அருவியில் கலந்தது. இதனால் தண்ணீா் செல்லும் நீரோடையில் மணல் மேடாகி கல்வெட்டு பகுதியில் அடைப்பு ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 7-அடி உயரமுள்ள மண், குப்பைகள் கடந்த மூன்று நாள்களாக அகற்றப்பட்டன. இதையடுத்து நீரோடையில் தடையின்றி தண்ணீா் செல்கிறது. இதனால் சாலையில் போக்குவரத்தும் சீரானது. இந்தப் பகுதியில் உள்ள வளைவுச் சாலையை நேராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் ஆலோசிக்கப்படும். சேதமடைந்த கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையை சீரமைக்க ரூ. 19 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதியில் வெள்ளி நீா் அருவியிலிருந்து ஏரிச் சாலை வரை, வாழைகிரி, பனிக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.