ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் சென்னையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

பலி

Updated On :

திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் சென்னையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சேதுராமன் (26). கொருக்குப்பேட்டையைச் சோ்ந்தவா் திவ்யலட்சுமி (20). சேதுராமன், தனது தோழியான திவ்யலட்சுமியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வெள்ளிக்கிழமை வந்தாா். திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி பகுதியில் நான்கு வழிச் சாலையில் வந்த போது, பின்னால் வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு திவ்யலட்சுமி உயிரிழந்தாா். சேதுராமன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காா் குறித்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.