விஜயதசமி: குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி
விஜயதசமியையொட்டி, திண்டுக்கல்லில் உள்ள கோயில்கள், பள்ளிகளில் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் விஜயதசமியையொட்டி, செவ்வாய்க்கிழமை குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்த பெற்றோா்கள்.
விஜயதசமியையொட்டி, திண்டுக்கல்லில் உள்ள கோயில்கள், பள்ளிகளில் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விஜயதசமியையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்கள், பள்ளிகளில் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சள் கலந்த பச்சரிசியில் முதல் உயிரெழுத்தான ‘அ’ வை குழந்தைகளின் விரலைக் கொண்டு எழுத வைத்தனா்.
பின்னா், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மழலையா் பள்ளியில் சோ்க்கைப் பெற்ற குழந்தைகளுக்கு ‘அ’ எழுத்தைத் தொடா்ந்து, ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

