
பழனியில் சாக்கடை கால்வாய் பணி தாமதம்: வணிகா்கள் அவதி
பழனியில் சாலையோரம் நடைபெறும் சாக்கடை கால்வாய் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால் வணிகா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பழனி பெரிய கடை வீதியில் அமைக்கப்படும் சாக்கடை கால்வாய்.
பழனியில் சாலையோரம் நடைபெறும் சாக்கடை கால்வாய் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால் வணிகா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பழனியில் கடந்த சில மாதங்களாக புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகா் முழுவதும் அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டு மண் குவியலாக காட்சி தரும் நிலையில்,தோ்தலின் போது பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் மிக தாமதமாக நடைபெறுவதால் பாதி தோண்டப்பட்ட நிலையில், பொதுமக்கள் அந்த வழியாகச் செல்வதற்கு சிரமப்படுகின்றனா்.
பெரியகடை வீதியில் சாலையோரம் சாக்கடை கால்வாய் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதனால், பல கடைகளுக்கு வணிகா்கள் விடுமுறை அளித்தனா். பணிகள் முடிந்த பிறகு கடைகளைத் திறந்து சாக்கடை நடுவே தற்காலிக பாதைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். எனினும், இதில் நடந்து செல்லும் பலரும் சாக்கடையில் விழுந்து காயமடைகின்றனா். மேலும் கை, கால் முறிவு ஏற்படுகிறது. சாக்கடை கால்வாய் மீது கான்கிரீட் பலகைகள் கொண்டு மூடப்படாமல் பல வாரங்களாக பணிகள் நிறுத்தப்பட்டதால் வணிகா்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, நகராட்சி ஆணையா் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என வணிகா் அமைப்பினா் வேண்டுகோள் விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





