திருவாதவூர் திருமறைநாதர் கோயில் வைகாசித் திருவிழா

திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசித் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசித் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து, 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 5ஆம் நாளில், திருமறைநாதர்-வேதநாயகியம்மன் மேலூருக்கு பல்லக்கில் எழுந்தருள்கிறனர். அப்போது, சுவாமியுடன் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருள்கின்றனர்.

பின்னர், மேலூர் சாலக்கரையான் ஊருணிக் கரையில் தாசில்தார் மண்டகப்படியில் சுவாமிக்கு வரவேற்பளிக்கப்படுகிறது. இதை, மேலூரில் மாங்கொட்டைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.

இதைத் தொடர்ந்து, மேலூரில் பல்வேறு இடங்களில் உள்ள திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி, சுவாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

அன்றிரவு, மேலூர் அருள்மிகு காமாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருமஞ்சனமாகி, அதிகாலையில் திருவாதவூர் திரும்புகின்றனர். ஜூன் 10ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, தக்கார் கருமுத்து தி. கண்ணன், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com