திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மேலூரில் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

திருப்பரங்குன்றம், மேலூர், உசிலம்பட்டியில்  வட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

திருப்பரங்குன்றம், மேலூர், உசிலம்பட்டியில்  வட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டாட்சியர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் திருப்பரங்குன்றம் வட்ட விவசாய உற்பத்தியாளர் சங்க செயலர் லட்சுமணன் உள்ளிட்ட விவசாயிகள் கூறியது : மழைக்காலம் தொடங்க உள்ளதால் திருப்பரங்குன்றத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கண்மாய்களின் வரத்து கால்வாய்களை சீர் செய்ய வேண்டும்.  மாடக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தென்பழஞ்சியில் பழுதாகியுள்ள குடிநீர் தொட்டியை சீர்செய்ய வேண்டும். அண்மையில் நிறுத்தப்பட்ட மதுரையிலிருந்து தென்பழஞ்சி, மாவிலிபட்டி வழியாக செல்லும் 53 எண் அரசு பேருந்தை இயக்க வேண்டும் என்றனர். 
மேலூர்: மேலூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் என்.பழனிச்சாமி, ஒருபோக விவசாயிகள் சங்கத் தலைவர் மீ.முருகன், ராஜமாணிக்கம், ராஜா, கண்ணன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட விவசாயிகள் கூறியது : முல்லைப் பெரியாறு அணையில் நீர் முழு கொள்ளவை எட்டும்நிலையில் உள்ளது. எனவே, ஒருபோக விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பதை காலதாமதம் செய்யக்கூடாது. பெரியாற்று தண்ணீரை ஒருபோக விவசாயப் பகுதிகளுக்கு உடனே திறக்க தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தெற்குத்தெரு நவனீதன் கண்மாய் தூர்வாரும் பணியை பாசன விவசாயிகளிடம் ஒப்படைக்கவேண்டும். வெள்ளரிப்பட்டி பாசன கண்மாய், நீரோடையில் ஆக்கிரமிப்பை உடனே அகற்றவேண்டும் என்றனர்.
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டாச்சியர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. செல்லம்பட்டி ஒன்றிய செயலர் வி.பி.முருகன் உள்ளிட்ட விவசாயிகள் கூறியது: வறட்சி காரணாக விவசாயிகள் கறவை மாடுகளை வைத்து வருமானம் பார்த்து வருகின்றனர். ஆனால் பால்களை கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் சரியான முறையில் பாலை அளப்பதில்லை. இதை ஆய்வு செய்ய வேண்டும். 58 கால்வாய் திட்டத்தில் பயன் பெறக்கூடிய கண்மாய்கள் தூர்வாராமல் இருக்கிறன.தூர்வாறிவிட்டு தொட்டி பாலத்தில் சோதனை ஓட்டம் விடவேண்டும் என்றனர். இக்கூட்டங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com