கல்லூரி விடுதிகளில் ராகிங் தடுப்புக் குழு திடீர் ஆய்வு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

கல்லூரிகளில் செயல்படும் ராகிங் தடுப்புக் குழு, விடுதிகளில் திடீர் ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் அறிவுறுத்தினார்.

கல்லூரிகளில் செயல்படும் ராகிங் தடுப்புக் குழு, விடுதிகளில் திடீர் ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் அறிவுறுத்தினார்.
  கல்லூரிகளில் ராகிங்கைத் தடுப்பது தொடர்பாக, அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் பேசியது:
 ஒவ்வொரு கல்லூரியிலும் ராகிங் தடுப்புக் குழு அமைத்து அக்குழுவில் இருப்பவர்களின் பெயர், செல்லிடப்பேசி எண்களை கல்லூரி மற்றும் விடுதி தகவல் பலகையில் விளம்பரப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில், ராகிங் புகார் தொடர்பான  இலவச தொலைபேசி எண் (18001805522), இணையதள முகவரி  (‌w‌w‌w.​a‌n‌t‌i‌r​a‌g‌g‌i‌n‌g.​c‌o‌m)  ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
  ராகிங் தடுப்புக் குழுவில் முதல் ஆண்டு மாணவர் ஒருவர் கண்டிப்பாக இடம்பெறுவது அவசியம். கல்லூரி நேரங்கள் தவிர விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு ராகிங் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தடுப்புக் குழு திடீர் ஆய்வு செய்ய வேண்டும்.
 ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வாராந்திர அறிக்கையை கல்லூரிக் கல்வி இயக்குநர், இணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர் அனுப்ப வேண்டும். அதற்கு முன்பாக, ராகிங் தடுப்பு குழுவில் இடம்பெறும் மாணவர் பிரதிநிதி, தன்னார்வத் தொண்டு நிறுவனம், ஊடகங்கள் ஆகியவற்றில் இருந்து உறுப்பினர்கள் தேர்வு செய்து அதன் விவரத்தை ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
 இக் கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜசேகரன்,  பல்வேறு துறை அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com