முதல்வர் மீது ஊழல் புகார் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: வைகோ வரவேற்பு

தமிழக முதல்வர் மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது

தமிழக முதல்வர் மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். 
   மதுரையிலிருந்து வெள்ளிக்கிழமை சென்னை சென்ற அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:  
  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் உறவினர்கள், நண்பர்களுக்கு விடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 
  இந்த தீர்ப்பு நல்ல நம்பிக்கையைத் தந்துள்ளது. திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் வாக்காளர்களுக்கு தவணை முறையில் பொருள்களைத் தந்து வருகின்றனர். எவ்வளவு பணம் செலவுசெய்தாலும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com