கைப்பந்து போட்டி: மாணவர் திறமை கண்டறியும் தேர்வு

மதுரை மாவட்டத்தில் கைப்பந்து போட்டியில் திறமை கண்டறியும் முகாம் தேர்வில் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் கைப்பந்து போட்டியில் திறமை கண்டறியும் முகாம் தேர்வில் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
   தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரை மாவட்டத்தில் திறமை கண்டறியும் முகாம் அடிப்படையில் கைப்பந்து விளையாட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திறமை கண்டறியும் தேர்வில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் 10 வயது முதல் 14 வயதுக்குள் இருத்தல் வேண்டும். தேர்வில் பங்கேற்பவர்கள் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளித் தலைமையாசிரியரிடம் உரிய வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும். தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் வாரத்தின் 5 நாள்கள் பந்தயத்திடல் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பயிற்சிக்கு கட்டாயம் வருதல் வேண்டும். 
  மாதத்தில் 25 நாள்கள் மாலை நேரங்களில் பயிற்சி அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு போக்குவரத்துப்படி, சத்தான உணவு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும்.
    தேர்வில் பங்கேற்க விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டுத் திடலில் நடைபெறும் கைப்பந்து தேர்வுப் போட்டியில் பங்கேற்கலாம் என்று மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com